ஸ்டெர்லைட் வழக்கில் ரஜினியிடம் கட்டாயம் விசாரணை: வழக்கறிஞர் தகவல்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவம் தொடர்பாக, விசாரணை ஆணையத்தின் கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார். அவரிடம் விசாரணை ஆணையம் சார்பாக 15 கேள்விகள் கேட்கப்பட்டன அந்த 15 கேள்விகளுக்கும் எழுத்துப்பூர்வமாக ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார் என்று அருணா ஜெகதீசன் ஆணையத்தின் வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் கூறியுள்ளார். மேலும், ரஜினியிடம் கட்டாயம் விசாரணை நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Tags :