ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஷூக்களுக்கு பாலிஷ் போட்டும் நிதி திரட்டும் பேராசிரியர்
சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.இந்த பள்ளியில் 217 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இதில் 80 மாணவர்களுக்கு மதிய உணவுடன் கல்வியும் வழங்கி வருகிறார். அந்தக் குழந்தைகளின் கல்வி, உணவு செலவுக்காக யாரிடமும் உதவி கேட்காதவர் செல்வக்குமார்.
இவர் வாரந்தோறும் பல்வேறு ஊர்களுக்கு சென்று பொது இடங்களில் அமர்ந்து கொண்டு பொதுமக்களின் காலணிகளை சுத்தம் செய்தும் ஷூக்களுக்கு பாலிஷ் போட்டும் நிதி திரட்டி வருகிறார்.
அந்த வகையில் நேற்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் பொதுமக்களின் காலணியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இதற்காக மக்கள் விரும்பி கொடுக்கும் பணத்தை பெற்று ஆதரவற்ற குழந்தைகளுக்கு செலவிட்டு வருகிறார். மேலும், தான் எழுதியுள்ள 59 புத்தகங்களை விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தையும் மாணவர்களுக்கு செலவிடுகிறார்.
Tags :