தமிழக மீனவர்கள் கைது பாமக ராமதாஸ் கண்டனம்

தமிழ்நாடு மீனவர்கள் 17 பேர் கைது. சிங்களப் படையினரின் தொடர் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும். வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 8 பேர், புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் பகுதி மீனவர்கள் 5 பேர், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 4 பேர் என மொத்தம் 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்;
தமிழ்நாடு மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், சிங்களக் கடற்படை அத்துமீறி நுழைந்து கைது செய்திருக்கிறது. சிங்களப் படையினரின் தொடர் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது என
- பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Tags :