ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்

by Editor / 24-07-2021 06:48:22pm
 ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்


 ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக போலீசார் பதிவு செய்த வழக்குகள் திரும்பப் பெறப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம், இடைக்கால அறிக்கையை கடந்த 14ம் தேதி தமிழக அரசுக்கு சமர்ப்பித்தது. 


ஆணையம் பரிந்துரை இந்த அறிக்கையில் போராட்டம் குறித்து போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தேவையற்ற வழக்குகளை திரும்பப் பெற ஆணையம் பரிந்துரைத்துள்ளது.இந்த பரிந்துரைகள் குறித்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்தும், காவல்துறை தலைவரின் அறிக்கையும் பெறப்பட்டு அரசால் கவனமாக பரிசீலிக்கப்பட்டது. அதன்படி, முதல்வர் ஸ்டாலின் பின்வரும் முக்கிய முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளார்.* இச்சம்பவம் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வழக்குகளில், மத்திய குற்ற புலனாய்வுத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள வழக்குகள், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பதியப்பட்டுள்ள வழக்குகள் தவிர, ஏனைய வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்.
ரூ.1 லட்சம் வழங்கப்படும். 


* வன்முறை சம்பவத்திற்கு முன்னர் போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் உள்ளிட்ட சில வழக்குகள் தவிர ஏனைய வழக்குகள் திரும்பப் பெறப்படும்
.* போலீசாரால் கைது செய்யப்பட்ட 94 பேரில் சிலருக்கு காயங்களும், பலருக்கு மனஉளைச்சலும் ஏற்பட்டதைக் கருதி, அதில் 93 பேருக்கு நிவாரணமாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். ஒருவர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலேயே இறந்துவிட்டபடியால், வாழ்வாதாரம் இழந்து வாடும் அவரது 72 வயது தாயாருக்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
* ஆணையம் அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் போராட்டத்தின்போது போலீசாரால் கைது செய்யப்பட்ட நபர்களின் உயர்கல்விக்காகவும், வேலைவாய்ப்பிற்காகவும் தடையில்லா சான்றிதழ்கள் வழங்கப்படும்.- இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories