வங்கி நகை அடகு குறித்த புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் - சீமான்

ஏழைகளைக் கடுமையாகப் பாதிக்கும், வங்கி நகை அடகு குறித்த புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கையில், பொதுமக்கள் வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளை முழுவதும் பணம் செலுத்தித் திருப்பி, மறுநாள்தான் மீண்டும் அடகு வைக்க முடியும் என்ற புதிய விதிமுறை மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். இதனால் மக்கள் மீண்டும் கந்து வட்டி வாங்கி, கடன் சுமையில் சிக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
Tags : வங்கி நகை அடகு குறித்த புதிய விதிமுறை