முத்தமிழறிஞர் கலைஞருக்கு வீரவணக்கம் - திருமாவளவன்

by Staff / 07-08-2023 12:06:04pm
முத்தமிழறிஞர் கலைஞருக்கு வீரவணக்கம் - திருமாவளவன்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், விசிக தலைவர் தொல் திருமாவளவன் தனது ட்வீட்டர் பக்கத்தில், “முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவுநாளான இன்று (ஆக.07) அவர் தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் ஆற்றிய மகத்தான பங்களிப்பை நினைவுகூர்ந்து அவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம். சென்னையில் வள்ளுவர் கோட்டமும் குமரியில் வானுயர திருவுருவச் சிலையும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்கிற வள்ளுவத்தின் மீது கலைஞருக்குள்ள தீவிர ஈடுபாட்டை உணர்த்தும். வள்ளுவர் விரும்பிய சமத்துவமே கலைஞரின் வேட்கை. அதன் சான்றே 'பெரியார் நினைவு சமத்துவபுரம். வள்ளுவரின் பெயருள்ள வரையில் கலைஞரின் புகழ் நிலைக்கும்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories