இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய வாலிபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் காவல்துறையினர் போத்தாபுரம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் விபசாரம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பெருமாள் என்பவருடைய வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு இளம்பெண்களை இளைஞர் ஒருவர் விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சசிகுமார் (25) என்பவரை கைது செய்தனர். பின்னர் இளம்பெண் மீட்கப்பட்டு சேலத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
Tags :















.jpg)
.jpg)
.jpg)
.jpg)
