பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியை திருமணம் செய்தால் போக்சோ வழக்கை ரத்து செய்ய முடியாது சென்னை உயர் நீதிமன்றம். 

by Editor / 30-04-2025 05:06:47pm
பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியை திருமணம் செய்தால் போக்சோ வழக்கை ரத்து செய்ய முடியாது சென்னை உயர் நீதிமன்றம். 

ஊட்டியைச்  சேர்ந்த சிறுமி ஒருவர் காணாமல் போனதாக அவரது பெற்றோர் புகார் அளித்தனர். புகாரை விசாரித்த போது, சிறுமி விஜயகுமார் என்ற இளைஞருடன் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, விஜயகுமார் மீது கடத்தல் மற்றும் போக்சோ பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.போக்சோ வழக்கை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில் போக்சோ வழக்கை ரத்து செய்ய  முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.விசாரணையின் போது, விஜயகுமாரும், தானும் காதலித்து வந்ததாகவும், தனது பெற்றோருக்கு இது தெரியவந்ததை அடுத்து வேறொரு நபருடன் திருமணம் செய்து வைக்க முயன்றதால் விஜயகுமாருடன் சென்றதாக சிறுமி கூறியுள்ளார்.

 

Tags : பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியை திருமணம் செய்தால் போக்சோ வழக்கை ரத்து செய்ய முடியாது சென்னை உயர் நீதிமன்றம். 

Share via