பெண்களின் போட்டோவை மார்பிங் செய்து மிரட்டிய யூடியூபர் கைது

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த யூடியூபர் துர்க்கை ராஜ், சமூக வலைதளங்களில் பிரபலமான பெண்களுடன் பழகி, அவர்களது புகைப்படங்களை பெற்று மார்பிங் செய்து, ஆபாசமான வார்த்தைகளை சேர்த்து யூடியூபில் வீடியோக்கள் வெளியிட்டு மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், தமிழக அரசியல் தலைவர்களைப்பற்றியும் தரக்குறைவான பதிவுகள் வெளியிட்டுள்ளார். இவர் மீது புகார்கள் எழுந்த நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவினர் அவரை கைது செய்து, புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Tags :