அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் 48 மணி நேரத்தை கடந்த சோதனை.
தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலை தென்மாத்தூர் கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அருணை பொறியியல் கல்லூரி, அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜீவா வேலு பன்னாட்டு பள்ளி, கரண் மகளிர் கல்லூரி என ஏராளமான சொந்தமான கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி காலை 7:00 மணி முதல் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் 100க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் வட்டாரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சுழற்சி முறையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக இந்த சோதனையானது தற்போது 48 மணி நேரத்தை கடந்து செல்கிறது. கல்லூரி வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags : அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் 48 மணி நேரத்தை கடந்த சோதனை.