சொந்த செலவில் சிவபெருமானுக்கு ஆலயம் ஒன்றை எழுப்பியதால்,ஊரையே தானமாகப்பெற்ற சிற்பி

அரசர்கள் காலத்தில் சிற்பிகள் மிக உன்னதமான முறையில் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்கள் அரசின் திட்டங்களை ,அரசாணைகளை கல்வெட்டுக்களாகச்செதுக்கி, அரசர்களின் வரலாற்றை நிரந்தரப்படுத்தினர்.மன்னர்களின் ஆன்மீகப்பணிக்கு,பண்பாட்டுச்செழுமைக்கு கோவில்களை நிரமாணித்து கொடுத்து,மக்களை இறைவழி பண்படுத்த உதவுவதற்குகாரணமானவர்களாகஇருந்துள்ளனர்.அதனால், அரசர்கள் சிற்பிகளுக்கு ஊரையே தானமாக வழங்கியதை வரலாறு சொல்கிறது அந்த வகையில் ,நாம் பார்க்கப்போவது,திருநெல்வேலி மாவட்டத்தில்,ஆழ்வார்குறிச்சிக்கு அருகே உள்ள கண்கவரும் அழகிய ஊர்தான் பாப்பான் குளம்.பச்சை பசேரென பச்சைப்பட்டு விரித்தாற்போலிருக்கும், பார்த்தவர் மனதை கொள்ளை கொள்ளும் கிராமம்.அந்த ஊருக்கு நெற்றி பொட்டாய் பிரகாசிக்கும் கோவில். பாண்டிய மன்னன் ஆதித்த வர்மன் காலத்தில்,சிற்பக்கலையில்சிறந்தோங்கியவர் சிற்பி சதுர்வேதி.அவரது
கலைத்திறத்தால்...கலை ஞானத்தால்..வடிக்கப்பெற்ற சிற்பங்களும் கோவில்களும் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றன. அதன் பொருட்டே அவருக்கு பாண்டிய மன்னனால் ,சிறப்பு செய்யும் பொருட்டு வழங்கப்பட்ட ஊரே பாப்பான் குளம்.இவ்வூர் முதலில் சதுர்வேதிமங்களம் என்றே அழைக்கப்பெற்றது.அப்படிப்பட்ட மகா சிற்பிக்கு சில பிரச்சனைகள் தோன்றின.மனக்கஷ்டத்தால் அவதிபட்டவர் சோதிடர்கள் உதவியை நாடினார்.அவர்களோ சனி தோஷம் ஏற்பட்டிருக்கிறது என்றும் .இத்தோஷம்நிவர்த்தி ஆக வேண்டுமெனில்,சொந்த செலவில் சிவபெருமானுக்கு ஆலயம் ஒன்றை எழுப்பினால், தோஷம் நீங்கிவிடுமென்று கூறினர்.சனிதோஷம் நீங்கிட அவரால் திருப்பணி செய்து எழுப்பப்பட்டதே திருவெண்காடர் திருக்கோவில்.சனி தோஷம் பீடிக்கப்பட்டிருப்பவர்கள் இக்கோவிலுக்குச்சென்றுவர.. தோஷமெல்லாம் நீங்க பெறுவதாகச்சொல்கிறார்கள்.
![]() |
ReplyForward |
Tags :