ஒருங்கிணைந்த ஆந்திராவின் கடைசி முதல்வருக்கு எம்.பி. சீட்

by Staff / 25-03-2024 11:57:56am
ஒருங்கிணைந்த ஆந்திராவின் கடைசி முதல்வருக்கு எம்.பி. சீட்

ஒருங்கிணைந்த ஆந்திராவின் கடைசி முதலமைச்சராக பதவி வகித்த நல்லாரி கிரண் குமார் ரெட்டி மீண்டும் தீவிர அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளார். ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். ஆனால் இம்முறை அவர் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இறங்குகிறார். தற்போது பா.ஜ.,வில் உள்ள அவருக்கு, ராஜாம்பேட்டை எம்.பி., சீட்டை கட்சி ஒதுக்கியுள்ளது. மேலும் முன்னாள் முதலமைச்சரான கிரண் குமார், தெலுங்குதேசம்-ஜனசேனா-பாஜக கூட்டணியில் எம்.பி.யாக வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Tags :

Share via

More stories