கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடக்கம்

by Staff / 19-02-2024 11:41:51am
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடக்கம்

2024ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்றும் கலைஞரின் கனவு இல்லம் என இத்திட்டத்திற்கு பெயர் சூட்டப்படுவதாகவும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த அவர், கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 2,000 கி.மீ. சாலைப்பணிகள் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். 2,000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ரூ.356 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 5,000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு செய்ய ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய நிறுவனம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

 

Tags :

Share via