குற்றால பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.

by Editor / 05-11-2023 08:41:29am
குற்றால பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 1ஆம் தேதி இரவு முதல் விடிய..விடிய.. பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகள் குற்றாலம் பேரருவியில் குளிப்பதற்கு தடை நீடிக்கப்பட்டது மேலும் நேற்று  பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் அந்தப் பகுதியில் குளிப்பதற்கு தடை நீடித்தது மேலும் நேற்று சுற்றுலா பயணிகள் விடுமுறை தினம் என்பதால் அதிக அளவில் திரண்டு வந்ததை தொடர்ந்து குற்றாலம் பேரருவியின் ஓரத்தில் நின்று குளிப்பதற்கு காவல்துறையினர் அனுமதி அளித்தாது.இன்று மேற்குதொடர்ச்சிமலைப்பகுதியில்  மழையின் தாக்கம் குறைந்ததால் குற்றாலம் பேரருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் காலைமுதல் திரண்டு வந்து குளித்து சென்ற வண்ணம் உள்ளனர் மேலும் பாதுகாப்பு வளையத்தை ஒட்டியுள்ள இரண்டு பகுதிகளிலும் தடுப்பு வேலிகள் வைத்து அடைத்து வைக்கப்பட்டது அகற்றப்பட்டுள்ளது.--file sent ftp

 

Tags : குற்றால பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.

Share via