கோவை 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு முழுமையான வெற்றியை வழங்கிட முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.
இன்று கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் அறிமுகம் மற்றும் பிரச்சார கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் சொன்னதை விட அதிகம் செய்யும் ஆற்றல் உடையவர் செந்தில் பாலாஜி என்று அவரை புகழ்ந்த தோடு செம்மொழிப் பூங்கா அமைத்தல் ஜேடி நாயுடு மேம்பால விரிவாக்கம், ஆர் .எஸ். புரத்தில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம், அத்திகடவுஅவிநாசி மூன்றாம் கட்ட கூட்டு குடிநீர் திட்டம் போன்றவற்றையும் திமுக அரசு செய்திருப்பதாக தெரிவித்தார். அத்துடன் பம்பு செட்டு தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று தேர்தல் அறிக்கையில் 20 லட்சம் விவசாயிகளுக்கு புதிய பம்பு செட்டுகள் வழங்கும் திட்டம் சேர்க்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியதோடு உக்கடம் பேருந்து நிலைய திட்டம் மற்றும் விசைத்தறி தொழிலாளர்களுக்கான மின் கட்டண குறைப்பு குறித்தும் அவர் எடுத்துரைத்தார். மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் சிங்காநல்லூர் மேம்பாலம் கட்டப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். ஜனநாயகத்தை காப்பதற்கான பொறுப்பு கூறல் தேர்தல் என்று குறிப்பிட்ட அவர் கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு முழுமையான வெற்றியை வழங்க வேண்டி வேட்பாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.
Tags :

















