டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்:  அணிகளின் பட்டியல் வெளியீடு

by Editor / 24-07-2021 04:36:28pm
 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்:  அணிகளின் பட்டியல் வெளியீடு

 


டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்குபெறும் அணிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே அணியில் இடம்பெற்றுள்ளன.


16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் மாதம் இந்தியாவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாகப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் வருகிற அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை இந்தப் போட்டிகள் நடக்கிறது.

போட்டியில் பங்கேற்கும் அணிகள் எந்தெந்த பிரிவில் இடம் பெறும் என்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது. கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி தரவரிசை அடிப்படையில் அணிகளுக்கான பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 30ஆம் தேதி துவங்கும் இரண்டாவது சுற்றில் மொத்தம் 30 போட்டிகள் நடைபெறவுள்ளது. 12 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய மைதானங்களில் விளையாடும். அதன்பிறகு மூன்று பிளே ஆஃப் சுற்று, இரண்டு அரையிறுதி, ஒரு பைனல் நடைபெறும்.

இதன்படி நேரடியாக 2-வது சுற்றில் (சூப்பர் 12) களம் காணும் 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. இதில் குரூப்1-ல் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளும், குரூப்2-ல் முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு பிறகு முதல்முறையாக சந்திக்க இருக்கின்றன. இரு அணிகளும் லீக் சுற்றிலேயே நேருக்கு நேர் மோதுகின்றன.


தொடக்க சுற்று லீக் ஆட்டத்தில் கலந்து கொள்ளும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா ‘ஏ’ பிரிவிலும், வங்காளதேசம், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, ஓமன் ‘பி’ பிரிவிலும் அங்கம் வகிக்கின்றன. முதல் சுற்று லீக் ஆட்டங்கள் முடிவில் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும், ‘பி’ பிரிவில் 2-வது இடம் பெறும் அணியும் குரூப்1-க்கும், ‘பி’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும், ‘ஏ’ பிரிவில் 2-வது இடம் பெறும் அணியும் குரூப்2-க்கும் முன்னேறும். இந்த போட்டிக்கான அட்டவணை பிறகு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via