அகமதாபாத் விமான விபத்தில் கிரிக்கெட் வீரர் மரணம்

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கிரிக்கெட் வீரர் ஒருவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த 23 வயதான திர்த் படேல் என்பவர் இங்கிலாந்தின் ஹட்டர்ஸ்பீல்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு பயின்றுவந்தார். இதே வேளையில் அங்குள்ள லீட்ஸ் மாடர்னியன்ஸ் கிரிக்கெட் கிளப் அணியிலும் ஆடிவந்த அவர், இங்கிலாந்து புறப்பட்டபோது விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். திர்தின் மறைவுக்கு கிரிக்கெட் கிளப் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :