17 ஆண்டுகள் கழித்து அரசு பள்ளியில் ஆசிரியர் தந்தையை கொன்றவரை பழிக்கு பலியாக வெட்டி கொலை செய்தார்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தெற்கு மேடு பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் காளி என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். கடந்த 2009 ஆம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த முருகையா என்பவரை முன்விரதம் காரணமாக காளி கொலை செய்திருந்தார். இந்த வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டு காளி விடுதலை ஆகி வந்திருந்தார். காளியால் வெட்டி கொலை செய்யப்பட்ட முருகையாவின் மகன் தற்பொழுது அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவர் தம் தந்தையை வெட்டிக்கொன்ற காளியை பழிவாங்கும் பொருட்டு பல வருடங்களாக காத்திருந்தார். இந்நிலையில் , 17 ஆண்டுகள் கழித்து தற்பொழுது அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கும் முருகையா தனது தந்தையை கொன்ற காளியை பழிக்கு பலியாக வெட்டி கொலை செய்தார். புளியரை போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பள்ளி ஆசிரியர் முருகையாவை தேடி வருகின்றனர்.
Tags :


















