மர்மமான முறையில் மனைவி பலி.. கணவர் மீது எழுந்த சந்தேகம்

தெலங்கானா: மலக்பேட் பகுதிதைச் சேர்ந்த சிரிஷா என்ற பெண், மாரடைப்பால் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்கு கணவர் வினய் கூறியுள்ளார். மேலும், மனைவியின் குடும்பத்தினர் மருத்துவமனை வருவதற்குள், ஆம்புலன்ஸ் மூலம் சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த பெண்ணின் குடும்பத்தார் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் சடலத்தை மீட்டு போலீசார் நடத்திய சோதனையில், பெண்ணின் கழுத்தில் காயம் இருந்ததை கண்டறிந்தனர். தொடர்ந்து கணவர் வினய்யிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :