பிளஸ் 2 தேர்வு தொடங்கிய நிலையில் மாணவி தற்கொலை முயற்சி

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியுள்ள நிலையில் திருவள்ளூரை சேர்ந்த மாணவி இன்று (மார்ச். 03) அதிகாலை வீட்டில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பிளஸ் 2 மாணவியான அவர் தீக்காயங்களுடன், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிக மதிப்பெண் எடுக்க மாணவிக்கு அழுத்தம் அளித்திருந்தால், தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
Tags :