ஜப்பானிய உளவு செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில்..

by Staff / 13-01-2024 02:27:21pm
ஜப்பானிய உளவு செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில்..

வடகொரியாவின் நடவடிக்கைகளை உளவு பார்க்கும் நடவடிக்கைகளை ஜப்பான் முடுக்கிவிட்டுள்ளது. இதற்காக, கண்காணிப்பு செயற்கைக்கோள் வெள்ளிக்கிழமை விண்ணில் ஏவப்பட்டது. இது வடகொரிய படைகளின் நடமாட்டத்தை கண்டறியும். சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களையும் கண்டறிந்து எச்சரிக்கிறது. இது தனேகாஷிமா விண்வெளி நிலையத்தில் இருந்து H2A ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் தெளிவான படங்களை எடுக்கக்கூடியது.

 

Tags :

Share via