ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 7.4 ஆக பதிவு

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். இது ரிக்டர் அளவு கோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஹோண்ஷு பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பதறியபடி, வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதுவரை உயிர்ச்சேதம் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை
Tags :