நாகர்கோவில் ஆட்டோ டிரைவர் கொலையில் 3 பேர் சிக்கினர்

by Staff / 25-02-2023 04:07:31pm
நாகர்கோவில் ஆட்டோ டிரைவர் கொலையில் 3 பேர் சிக்கினர்

நாகர்கோவில் ராமன் புதூர் கார்மல் தெருவை சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் (வயது 54), ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 16-ந்தேதி வீட்டில் இருந்து சவாரிக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மனைவி மேரிலதா நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கிறிஸ்துராஜை தேடி வந்தனர். இந்த நிலையில் கிறிஸ்து ராஜ் ஆசாரிப்பள்ளம் இந்திராநகர் பகுதியில் ரத்தக்காயங்களுடன் கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கிறிஸ்துராஜ் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.இது குறித்து நேசமணி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

கிறிஸ்துராஜ் உடல் பிரேத பரிசோதனை நேற்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடந்தது. இதில் கிறிஸ்துராஜ் அடித்து கொலை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. கொலை செய்த குற்ற வாளிகளை கைது செய்யவேண்டும் அதன் பிறகு உடலை பெற்றுக் கொள்வோம் என்று கூறி அவருடைய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகி றார்கள். இது தொடர்பாக 3 பேரை பிடித்து விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது.சவாரிக்கு அழைத்து செல்லும்போது கிறிஸ்துராஜிடம் பணம் இருப்பதை பார்த்த நபர்கள் அவரை அடித்து கீழே தள்ளி விட்டு பணத்தை எடுத்துச் சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது. மேலும் பணம் கொடுக் கல், வாங்கல் பிரச்சனை தொடர்பாக கிறிஸ்துராஜை கொலை செய்தார்களா வேறு ஏதாவது காரணமா என்று பல்வேறு கோணங் களில் போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

Tags :

Share via