தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை.

தமிழகத்தில் நேற்று (மே. 17) பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. வெவ்வேறு மாவட்டங்களில் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை விபரங்களின்படி தர்மபுரியில் மழை வெளுத்து வாங்கியது தெரியவந்துள்ளது. அங்குள்ள ஒகேனக்கல் வனப்பகுதியில் அதிகபட்சமாக 122.6 மில்லி மீட்டர் மழை பதிவானது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் 116.8 மில்லி மீட்டர் மழை பதிவானதாக வானிலை மையம் தெரிவித்தது.
Tags : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை.