பொருளாதார பிரச்சினையை தூள் தூளாக்கி  4 இளம் வீரர் வீராங்கனை தங்கபதக்கம் வென்றனர்

by Editor / 02-05-2023 08:42:54am
பொருளாதார பிரச்சினையை தூள் தூளாக்கி  4 இளம் வீரர் வீராங்கனை தங்கபதக்கம் வென்றனர்

துபாயில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் பொருளாதார பிரச்சினையை தூள் தூளாக்கி  4 இளம் வீரர் வீராங்கனை தங்கபதக்கம் வென்றனர்

துபாயில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் தென்காசி மாவட்டம் இலஞ்சியை சேர்ந்த 4 இளம் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றனர்

சர்வதேச இளைஞர் விளையாட்டு கல்வி கூட்டமைப்பின் 2023 தெற்கு ஆசிய சிலம்பம் 5 வது விளையாட்டு போட்டிகள் துபாய் நகரின் சிலிக்கான் சோலையின் ரிட் கல்லூரியில் நடைபெற்றது இதில் புடோகன் கோப்பை மற்றும் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது 

இந்த போட்டியில் தென்காசி மாவட்டம் இலஞ்சி குருகுலம் சித்திரச் சிலம்பம் பயிற்சி மையத்தில் உள்ள முகமது யாசர் 7, மணிகண்டன் 11, சித்ரா 10, கனிஷ்கா 15 ஆகிய இளம் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு குத்து வரிசை மற்றும் சிலம்ப தனித்திறமை விளையாட்டில் கலந்து கொண்டு  தங்கப்பதக்கம் வென்றனர் 

இதில் என்ன ஒரு முக்கியமான தகவல் என்னவென்றால் இந்த இளம் வீரர் வீராங்கனைகள் துபாய் சென்று வருவதற்காக பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிப்பதாக தகவல் அறிந்த நிலையிலும்  இவர்களுடைய குருநாதர் சிவகிருஷ்ணன் கடும் முயற்சி செய்து கடன் பெற்று துபாய் சென்று போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இவர்களை போன்ற இளம் வீரர் வீராங்கனைகளுக்கு பொருளாதாரம் பிரச்சினையாக இருந்தாலும் மனம் தளராமல் முயற்சி செய்த குருவுக்கு பதக்கம் மூலம் ஆறுதல் கூறிய வீரர் வீராங்கனைகளை உண்மையிலே பாராட்டத்தான் செய்தாக வேண்டும் அதோடு இப்படிப்பட்ட வீரர் வீராங்கனைகளுக்கு ஸ்பான்சர்ஷிப் கிடைத்தால் மேலும் இவர்களது விளையாட்டை மேம்படுத்தவும் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்திற்கு புத்துயிர் கிடைத்தது போல் இருக்கும் என்று தெரிகிறது

 

Tags :

Share via