அன்புமணி ராமதாஸின்  பதவிக்காலம் ஆகஸ்ட் 1 2026 வரை செல்லுபடியாகும்.

by Admin / 10-02-2026 01:37:03am
 அன்புமணி ராமதாஸின்  பதவிக்காலம் ஆகஸ்ட் 1 2026 வரை செல்லுபடியாகும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி தலைமை பூசல் தொடர்பான வழக்கில்  டாக்டர் அன்புமணி ராமதாஸை கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட  தலைவர் என்று இந்திய தேர்தல் ஆணையம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தி உள்ளது. சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்  அடிப்படையில் அன்புமணி ராமதாஸின்  பதவிக்காலம் ஆகஸ்ட் 1 2026 வரை செல்லுபடியாகும் என்றும் அதுவரை அவரே கட்சியின் தலைவர் என்றும் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது கட்சியின் பெயரும் மாம்பழ சின்னமும் அன்புமணி தலைமையிலான தரப்பிற்கு சொந்தம் என்பதும் இதன் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது உக்கட்சி விவகாரங்களில் சட்டவிரல்கள் ஏதும் இல்லாதவரை நீதிமன்றம் தலையிடாது என்று குறிப்பிட்ட  டெல்லி உயர்நீதிமன்றம்  தேர்தல் ஆணையத்தின் இந்த விளக்கத்தை பதிவு செய்து கொண்டது இந்த முடிவானது .பாட்டாளி மக்கள் கட்சிநிறுவன டாக்டர் ராமதாஸ்  மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நிலவி வரும் தலைமை போட்டியில் அன்புமணியின் தரப்பிற்கு சட்ட ரீதியான வழுவை சேர்த்துள்ளது.

 அன்புமணி ராமதாஸின்  பதவிக்காலம் ஆகஸ்ட் 1 2026 வரை செல்லுபடியாகும்.
 

Tags :

Share via

More stories