ஆலங்குளத்தில் அரசு பேருந்தின் மீது ஏறி ஆட்டம் போட்ட இளைஞர்கள் -வைரலாகும் வீடியோ.

by Staff / 16-07-2025 12:12:11am
ஆலங்குளத்தில் அரசு பேருந்தின் மீது ஏறி ஆட்டம் போட்ட இளைஞர்கள்  -வைரலாகும் வீடியோ.

முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழாவானது இன்று தமிழக முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் காமராஜர் பிறந்த நாள் விழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

 இந்த நிலையில், ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் காமராஜர் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு ஆட்டம், பாட்டத்துடன் வெகு விமர்சையாக காமராஜரின் பிறந்தநாளை கொண்டாடி அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 இந்த நிலையில், காமராஜர் பிறந்தநாள் விழாவை கொண்டாட வந்த சில இளைஞர்கள் உற்சாக மிகுதியில் அந்த வழியாக சென்ற அரசு பேருந்தின் மீது ஏறி ஆட்டம் போட்ட நிலையில், சற்றும் சளைக்காத அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்தாமல் அங்கும் இங்குமாய் வளைத்தபடி சென்ற நிலையில், பேருந்து மேல் ஏறி நின்று ஆட்டம் போட்ட அந்த இளைஞர் பயத்தில் பேருந்தின் மீது படுத்தபடி ஒரு கட்டத்தில் பேருந்தை நிறுத்துங்கள், நிறுத்துங்கள் என கதறிய நிலையில், சற்று தொலைவில் பேருந்தை நிறுத்தி அந்த இளைஞரை எச்சரித்து கீழே இறக்கிவிட்டுள்ளார்.

 இதேபோல், அந்த வழியாக வந்த கனிம வள லாரி ஒன்றின் மீதும் இளைஞர் ஒருவர் ஏறி ஆட்டம் போட்ட நிலையில் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது இதுபோன்ற அராஜக செயலில் இளைஞர்கள் ஈடுபட்ட சம்பவம் அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆலங்குளத்தில் அரசு பேருந்தின் மீது ஏறி ஆட்டம் போட்ட இளைஞர்கள்  -வைரலாகும் வீடியோ.
 

Tags : Video of youth dancing on top of government bus in Alankulam goes viral.

Share via