மோசடி வழக்குகளில் 19 கோடி 62 லட்சம் பணம் வங்கிகளில் முடக்கம்- எஸ்பி பாலாஜி சரவணன்  

by Editor / 18-01-2024 10:31:28pm
மோசடி வழக்குகளில் 19 கோடி 62 லட்சம் பணம் வங்கிகளில் முடக்கம்- எஸ்பி பாலாஜி சரவணன்  

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக 127 வழக்கு பதிவு செய்யபட்டு  241 பேர் கைது செய்யபட்டுள்ளனர். மேலும்1.53 கோடி மதிப்பிலான 1535 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்டுள்ளது.மேலும
185 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டுள்ளனர் எஸ்பி பாலாஜி சரவணன் பேட்டி

 தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொலைந்து போன திருடு போன பொது மக்களின் 100 செல்போன்கள்  காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கலந்துகொண்டு செல்போன்களை உரியவர்களிடம் வழங்கினார் ,                  

தூத்துக்குடி மாவட்டத்தில்இதுவரை 10வது முறையாக பல்வேறு பகுதிகளில் தொலைந்து போன 87லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 875 செல்போன்கள் மீட்கபட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளது.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கூறுகையில்
ஆன்லைன் உள்ளிட பல்வேறு வகை மோசடி செய்த 28 வழக்குகளில் 46லட்சத்து 59 ஆயிரம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது,மேலும் பல்வேறு மோசடி வழக்குகளில் 19 கோடி 62 லட்சம் பணம் வங்கிகளில் முடக்கபட்டுள்ளது.வழக்கு முடிந்ததும் உரியவர்களிடம் ஒப்படைக்கபடும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 68 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது.கடந்த ஆண்டை விட 10 குறைவு.578 பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு. இது கடந்த ஆண்டை விட 22 வழக்குகள் குறைவு. மேலும் இந்த வழக்குகளில் குறைவு 71 சதவிகிதம் முடிக்கபட்டுள்ளது.இந்த வழக்குகளில் 3.81 கோடி மீட்கபட்டு பாதிக்கபட்டவர்களிடம் ஒப்படைக்கபடுள்ளது.

தூத்துக்குடி  மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக 127 வழக்கு பதிவு செய்யபட்டு  241 பேர் கைது செய்யபட்டுள்ளனர். மேலும்1.53 கோடி மதிப்பிலான 1535 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்டுள்ளது.

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 185 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்

 

Tags : மோசடி வழக்குகளில் 19 கோடி 62 லட்சம் பணம் வங்கிகளில் முடக்கம்- எஸ்பி பாலாஜி சரவணன்  

Share via