சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 29 நபர்கள் கைது.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து 28.01.2023 -ம் தேதி முதல் 04.02.2023 -ம் தேதி வரை சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 27 நபர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 470 பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
நெல்லை தாலுகா அவினாபேரி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முத்துலெட்சுமி (41) என்பவர் அவருடைய பெட்டி கடையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததைக்கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து சட்ட விரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த 20 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தார்.
தாழையூத்தை சேர்ந்த இசக்கியப்பா (49) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த 257 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags :