by Editor /
08-07-2023
11:11:32am
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை எதிர்க்கட்சித் தலைவரம்,அதிமுகவின் பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வருகைத்தந்தார்.அவரை வரவேற்க நெல்லை,தூத்துக்குடி மாவட்ட அதிமுகவினர் விமான நிலையத்தில் குவிந்தனர்.இதில் தள்ளுமுள்ள உருவானது.மேலும் அதிமுக தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.இதனைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புபணியில் இருந்த போலீசார் அதிமுக தொண்டர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
Tags :
Share via