கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தாக்கி கொலை செய்த மனைவி கைது.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் சிக்சனா என்ற பகுதியில் வசித்து வந்தவர் பவன். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு, ரீமா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த பகேந்திரா என்ற இளைஞருடன் ரீமாவுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் கணவனுக்கு தெரியவர ரீமாவை பவன் கண்டித்துள்ளார். இந்நிலையில், ரீமா,பகேந்திராவை தன் வீட்டிற்கு அழைத்திருந்தார். இருவரும் வீட்டில் உல்லாசமாக இருக்கும்போது, பவன் இருவரையும் பார்த்து ஆவேசத்துடன் ரீமாவை தாக்கினார். அப்போது ரீமா, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தாக்கி கொலை செய்துள்ளார். பின்பு, பவனின் சடலத்தை அருகில் உள்ள கால்வாயில் பிளாஸ்டிக்கில் சுற்றி கல்லைக் கட்டிப் போட்டுள்ளனர். கணவனை காணவில்லை என புகாரளித்த நிலையில், ரீமாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தீவிர விசாரணையில், கணவனை கொன்றது ரீமா என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் ரீமாவையும், அவரது காதலனையும் கைது செய்தனர்.

Tags : ராஜஸ்தான் மாநிலம்