ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி அதிமுகவினர் பேரணி

ஆளுநர் ஆர்.என் ரவியை இன்று நேரில் சந்தித்து விஷச்சாராய மரணங்கள் குறித்து புகார் அளிக்கவுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதனை தொடர்ந்து அதிமுக கட்சியினர் ஆளுநர் மாளிகைக்கு பேரணி சென்று வருகின்றனர். முன்னதாக விழுப்புரம், செங்கல்பட்டில் கள்ள சாராயம் குடித்து 17 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து நேற்றைய தினம் தஞ்சையில் மதுவில் சயனைடு கலந்த சம்பவத்தில் இருவர் பலியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 20 ஆண்டுகளாக இல்லாத கள்ள சாராயம் இரண்டு ஆண்டுகளில் வந்தது எப்படி என திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார் அதிமுகவினர்.
Tags :