பலாத்காரம் செய்து கழுத்தறுத்து கொலை: சைக்கோ இளைஞர் கைது

by Staff / 22-05-2023 01:16:54pm
பலாத்காரம் செய்து கழுத்தறுத்து கொலை: சைக்கோ இளைஞர் கைது

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பாவாயி என்ற மூதாட்டி மார்ச் மாதம், கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த பொழுது பலாத்காரம் செய்து கழுத்தறுத்து கொலை செய்ததுடன் அவர் அணிந்திருந்த 12 சவரன் தங்க நகை கொள்ளை போனது. கடந்த 12ஆம் தேதி பள்ளிபாளையம் அருகே பழனியம்மாள் என்ற மூதாட்டியும் பாலியல் வனகொடுமை செய்து தலையில் கல்லால் தாக்கி கொலை செய்ததுடன், அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். எஸ்.பி.பி. காலனியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், அவர் மூதாட்டிகளை நகைக்காக கொலை செய்தது தெரியவந்தது.

 

 

Tags :

Share via

More stories