பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மோடி விருந்து

பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி தனது இல்லத்தில் இன்று காலை விருந்து அளித்து பாராட்டினார்.
டோக்கியோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட வீரர்கள் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கல பதக்கம் உள்பட 19 பதக்கங்களை வென்று பரப்பான பிரச்சாரத்தின் பின்னணியில் தாயகம் திரும்பினார்கள். பாரா ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியில் 24வது இடத்தை பிடித்து இந்தியா சாதனைப்படைத்துள்ளது. பாரா ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு இன்று காலை பிரதமர் மோடி தனது இல்லத்தில் விருந்து அளித்து அவர்களை பாராட்டி அவர்களுடன் கலந்துரையாடினார்.
பேட்மிண்டன் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற நொய்டா மாவட்ட மாஜிஸ்திரேட் சுகாஸ் எதிராஜூடன் மோடி கலந்துரையாடினார். மேலும் தங்கப் பதக்கம் வென்ற கிருஷ்ணா நாகர், பாலக் கோக்லி மற்றும் 2 பதக்கங்கள் வென்ற அவானி லேகரா, சிங்கராஜ் மற்றும் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் சென்ற பவினா படேல் மற்றும் ஹர்விந்தர் ஆகியோரிடம் பிரதமர் கலந்துரையாடினார்.
Tags :