நாளைமுதல் வடமாநிலங்களில் மழை குறைய வாய்ப்பு

by Editor / 28-07-2023 10:51:42pm
நாளைமுதல் வடமாநிலங்களில் மழை குறைய வாய்ப்பு

நாளை முதல் படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், இமாச்சல், அசாம், மேகாலயா, கோவா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குஜராத், கர்நாடகா, ஒடிசா, மணிப்பூர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via