துப்பாக்கியை காட்டி மிரட்டி அத்துமீறல் தென்காசியை சேர்ந்த 3 பேர் கைது

by Staff / 21-04-2022 03:08:59pm
துப்பாக்கியை காட்டி மிரட்டி அத்துமீறல் தென்காசியை சேர்ந்த 3 பேர் கைது

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் துப்பாக்கியை காட்டி மிரட்டி நள்ளிரவில் அத்துமீறலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சிவப்பு நிற மகேந்திரா பொலிரோ வாகனத்தில் வந்த நபர்கள் கட்டணம் செலுத்த முடியாது எனக் கூறி டோல்கேட் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது காரில் இருந்த நபர் கைது பாக்கி ஒன்றை எடுத்து மிரட்டியதுடன் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து டோல்கேட் ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து அப்பகுதி கண்காணிப்பை தீவிரப்படுத்திய  போலீசார் சுங்க சாவடிகளை குறிவைத்து அவர்களை மடக்கிப் பிடித்தனர் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் பொன்ராஜ் ஆகியோர் தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது .அவர்களிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கியை மற்றும் அவர்கள் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo