அழகிகளை வைத்து விபச்சாரம் - பெண் கைது

கோயம்புத்தூர் கணபதி பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் (24). இவர் நேற்று செல்வபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கணபதியை சேர்ந்த சுபாஷினி (30) என்ற பெண், “பணமிருந்தால் சொல்லுங்கள், எங்களிடம், அழகிகள் உள்ளார்கள் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம்”என கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த தினேஷ்குமார் தன்னிடம் பணமில்லை. ஏடிஎம்-இல் பணம் எடுத்து வருவதாக கூறி அங்கிருந்து சென்று, செல்வபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார், சுபாஷினியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags :