ஆந்த்ரோபிக் நிறுவனம் தனது கிளவுட் ஏஐ மாடலுக்காக
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏ ஐ கருவிகளின் அறிமுகத்தால் இந்திய ஐடி துறைகளில் பெரும் அதிர்வுகள் உருவாகியுள்ளன. இதன் காரணமாக இன்போசிஸ் பங்குகள் ஏழு சதவீதத்திற்கு அதிகமாகவும் டிசிஎஸ் பங்குகள் சுமார் ஆறிலிருந்து ஏழு சதவீதம் வரையிலும் சரிந்தன. நிஃப்டி குறியீடுகளும் ஒரே நாளில் சுமார் 2 லட்சம் கோடி சந்தை மதிப்பீட்டை இழந்தன.
ஆந்த்ரோபிக் நிறுவனம் தனது கிளவுட் ஏஐ மாடலுக்காக கிளவுட் கோ ஒர்க் மற்றும் 11 புதிய பிளக்இன்களை அறிமுகப்படுத்தியது. இந்த கருவிகள் சட்டம் விற்பனை சந்தைப்படுத்துதல் மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற பணிகளை தானாகவே செய்யும் திறன் கொண்டவை. இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த வேலைகளை அதிக பணியாளர்களைக் கொண்டு செய்து வரும் நிலையில் ஏ ஐ கருவிகள் இப்பணியை எளிதாக செய்து விடுவதின் மூலம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை வாடிக்கை நிறுவனங்கள் சார்ந்திருக்கின்ற பிரச்சனை குறையும் என்று முதலீட்டாளர்கள் அஞ்சுகின்ற சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக வேலை நேரங்கள் மற்றும் லாப வரம்புகள் குறையக்கூடும் என்றும் இதனால் மென்பொருள் சேவை நிறுவனங்களையும் சந்தைப்படுத்துதலில் அதிகம் பாதிக்கும் என்றும் பல நிறுவனங்கள் அச்சம் கொண்டுள்ளன.
Tags :


















