பிலிப்பைன்ஸில் - நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தெற்கு பிலிப்பைன்சில் இன்று அதிகாலை மின்டானோ தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏழு புள்ளி எட்டு ரிட்டர் அளவில் ஏற்பட்டுள்ளது அதன் காரணமாக அங்கே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மென்டானோ தீவில் ஜெனரல் சான்றோஸ் நகருக்கு அருகில் பூமிக்கு அடியில் சுமார் 10 முதல் 35 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது முதல் கட்ட தகவலின் படி ஒரு நபர் உயிரிழந்தார் என்றும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் பல பகுதிகளின் மின்தடை ஏற்பட்டதுடன் சில கட்டடங்கள் செயல் இழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
பிலிப்பைன்ஸ் இன் சில கடலோரப் பகுதிகளில் மூன்று மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் எழக்கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது கடலோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்களை உயரமான இடங்களுக்கு அல்லது உள்நோக்கிய பகுதிகளுக்கு செல்லுமாறு பிலிப்பைன்ஸ் அரசு அச்சுறுத்தல் வழங்கியுள்ளது
Tags :













.jpg)
.jpg)



