இன்று டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள்
இன்று டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்கின்றன என காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இந்த கூட்டத்தில் இந்திய கூட்டணியில் பங்கேற்றிருந்த திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டத்தில் பங்கேற்க வில்லை என்று அறிவித்துள்ளது
கான்சிட்யூஷன் கிளப்பில் மதியம் 12.00 மணிக்கு இந்த கூட்டம் தொடங்குகிறது நாட்டில் தற்போதைய சூலையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி வேலைவாய்ப்பின்மை விவசாயிகள் பிரச்சனை மற்றும் வர இருக்கின்ற மக்களவைத் தேர்தலுக்கான எதிர்கால திட்டங்கள் குறித்தும் இதில் விரிவாக விவாதிக்க உள்ளதாக தெரிகிறது
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அகிலேஷ் யாதவ் தாக்கரே ஆகிய முக்கிய முகங்கள் பங்கேற்க உள்ளன
கூட்டணியில் இடம்பெற்று இருந்த திராவிட முன்னேற்ற கழகம் தமிழக தேர்தலை அடுத்து திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகியது அடுத்து இந்த கூட்டணியில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்துள்ளது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தாவேகாவுடன் கூட்டணி ஆட்சியில் பங்கெடுத்ததின் காரணமாக நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கோலுடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் அமர போவதில்லை என்றும் தங்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு செய்ய வேண்டிய திமுக விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது
இந்தக் கூட்டத்தை திமுக புறக்கணித்தாலும் நாட்டின் நலன் மற்றும் பொதுவான பிரச்சனைகளுக்கு நாடாளுமன்றத்தில் திமுக குரல் கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது
Tags :



















