மதுரை எய்ம்ஸ் - அமைச்சர் தகவல்

by Staff / 17-08-2023 02:08:38pm
மதுரை எய்ம்ஸ் - அமைச்சர் தகவல்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு இன்று மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளது. இந்நிலையில், இன்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகள் 33 மாதங்களில் முடிக்கப்பட்டு, 2028ம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கும், அன்றைய தினத்தில் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ள திமுக உண்ணாவிரத போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories