கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை-ஆட்சியர்

by Editor / 11-12-2022 08:51:03am
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை-ஆட்சியர்

மாண்டஸ் புயல் காரணமாக தற்போது கனமழை பெய்து வரும் நிலையில் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் அதன் மொத்த உயரம் 35 அடியில் தற்போது 34.43அடி உயரம் நீர் இருப்பு உள்ளது. அதன் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடியில் தற்போது 2960 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

நீர் தேக்கத்தின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக திறக்கபட்ட உபரி நீர் கூடுதலாகத் திறக்கப்பட்டு காலை 8 மணி முதல் 10ஆயிரம் கன அடியாக கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. மேலும் ஆந்திரமாநிலத்திலிருந்து அம்மபள்ளி அணைக்கட்டில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் காரணமாகவும் கொசஸ்த்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் உபரி நீர் செல்லும் திருகண்டலம், பெரிய பாளையம், காரனோடை, சீமாபுரம், மணலி, புதுநகர் உள்ளிட்ட ஆற்றின் இருபுறமும் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் ஆற்றில் இறங்கி குளிக்கக்கூடாது தரைப்பால சாலைகளை ஆபத்தான நிலையில் கடக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags :

Share via