விஜயை கைது செய்ய வலியுறுத்தி போஸ்டர்கள்.

நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் 27 ஆம் தேதி விஜய் பரப்புரை செய்த நிலையில், கரூர் பரப்புரை நாட்டையே உலுக்கும் விதத்தில் அமைந்தது. அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் மாநிலத்தின் பல மாவட்டங்களில் ’தப்பி ஓடிய விஜய் என்ற அரசியல் தற்குறியை கொலைக் குற்றவாளியை கைது செய்’ என போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. வடலூரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை மாணவிகள் கிழிந்தெறிந்தனர்.
Tags : விஜயை கைது செய்ய வலியுறுத்தி போஸ்டர்கள்..