சவால்களையும், அபாயங்களையும் எதிர்கொண்டு பிரதமர் முடிவுகளை எடுக்கிறார்.

by Editor / 10-10-2021 07:59:05pm
சவால்களையும், அபாயங்களையும் எதிர்கொண்டு பிரதமர் முடிவுகளை எடுக்கிறார்.

 உள்துறை அமைச்சர் அமித் ஷா அரசு செய்தி சேனலான சன்சத் டிவி-க்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியது.


மோடியின் பொது வாழ்க்கை மூன்று காலங்களாகப் பிரிக்கப்பட்டது., அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த பிறகு அவரது முதல் கட்ட பணி கட்சியின் பொறுப்பாளர் பணி.

இரண்டாவது கட்டத்தில் குஜராத்தின் முதலமைச்சராகவும், மூன்றாம் கட்டமாக தேசிய அரசியலில் நாட்டின் பிரதமராக நரேந்திர மோதி சிறப்பாக செயல்பட்டார்.1987ல், நரேந்திர மோடி பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகப் பொறுப்பேற்றார். அப்போது பாஜகவின் நிலை சரியாக இல்லை. தேசிய அளவில் பிஜேபிக்கு 2 இடங்கள் மட்டுமே இருந்த நிலையில், நரேந்திர மோடி குஜராத்தில் பொறுப்பேற்றார். அவர் வந்த பிறகு, அகமதாபாத் மாநகராட்சிக்கு முதல் தேர்தல் நடத்தப்பட்டது,
முதன்முறையாக குஜராத் மாநிலத்தில் பாஜக தனித்து ஆட்சி அமைத்தது என்று பட்டியல் நீண்டுக் கொண்டே செல்லும்.அரசாங்கத்தின் மீது அனைவரும் நம்பிக்கை இழந்திருந்த சூழ்நிலையில் நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வரானார் அவருக்கு நிர்வாகத்தில் அனுபவம் இல்லை, அவர் கிராமத் தலைவராக கூட பணிபுரிந்த்தில்லை.

ஆனால், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட புஜ் பகுதியின் முகத்தையே மாற்றினோம்.குஜராத் முதலமைச்சராக வெற்றிகரமான ஆட்சியைக் கொடுத்த நரேந்திர மோதி, மூன்றாம் கட்டத்தில் பிரதமரானார். வான்வழித் தாக்குதலை இந்தியா செய்ய முடியும் என்று யாராலும் கற்பனை செய்து பார்த்ததேயில்லை. இந்த வேலையை அமெரிக்கா மட்டுமே செய்து வந்தது.

'பிரதமர் போன்ற யாரையும் நான் பார்த்ததில்லை. அவர் அனைவர் சொல்வதையும் கவனமாகக் கேட்டு முடிவெடுக்கிறார். சில சமயங்களில் ஏன் தொடர்ந்து மீண்டும் மீண்டும் சந்திக்கிறோம் என்றே நாங்கள் நினைத்திருக்கிறோம், ஆனால் பிரதமருக்கு பொறுமை இருக்கிறது. பிரதமர் மோடி அனைத்து வேலைகளையும் செய்கிறார் என்று மக்கள் நினைக்கிறார்கள். பிரதமர் மோடி ஒழுக்கத்துடன் செயல்படுகிறார்.

எங்கள் கருத்தியல் எதிரிகள் எப்போதும் உண்மையை திரித்துக் கூறுகிறார்கள் என்று கூறும் உள்துறை அமைச்சர், அவர் சவால்களையும், அபாயங்களையும் எதிர்கொண்டு பிரதமர் முடிவுகளை எடுக்கிறார். ஆட்சியில் இருப்பது ஒன்றே அவரது குறிக்கோள் இல்லை. அவரது ஒரே இலக்கு இந்தியா முதலில் என்பது மட்டுமே. நாட்டை வலுப்படுத்துவதே பிரதமர் மோடியின் தீர்மானம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories