சென்னை கலைவாணர் கலை அரங்கில் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா.
சென்னை கலைவாணர் கலை அரங்கில் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது விழாவில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று தேர்வான நடிகர் நடிகர்களுக்கு விருதுகளையும் சாந்தி களையும் வழங்கி கௌரவித்தார். 2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் வெளியான சிறந்த திரைப்படங்கள் மற்றும் நடிகர் நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நடிகர் தனுஷ் வடசென்னை படத்திற்காகவும் சூர்யா சூரரை போற்று படத்திற்காகவும் கார்த்திக் தீரன் அதிகாரம் ஒன்று காகவும் நடிகை நயன்தாரா அறம் படத்திற்காகவும் சிறந்த நடிகர் கான விருதுகளை பெற்றனர். திரைப்பட விருதுகளுடன் 2014 2022 ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளும் எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன. இவ்விழாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கலைத்துறையை சார்ந்த நிகழ்வில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். திரைப்பட விருதுகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக கருத்து எழுந்த நிலையில் முதலமைச்சர் ஓய்வு பெற்ற நீதியரசர் வாசுகி தலைமையிலான குழுவின் பரிந்துரைப்படியே இந்த விருதுகள் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். இவ்விழாவில் ஏ .ஆர் .ரகுமான், இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் ,சுதா கொங்கரா, நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ஆண்ட்ரியா உள்ளிட்.டோா் விருதுகளை பெற்றனர்.
Tags :



















