பாவூர்சத்திரம் அருகே வீடுபுகுந்துபெண்கழுத்தறுத்து கொலை:கள்ளக்காதலன் வெறிச்செயல்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பனையடிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பரமசிவன் இவருக்கு திருமணமாகி உமா (வயது 41) என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். பரமசிவன் பாவூர்சத்திரத்தில் - கடையம் சாலையில் சலூன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலையில் பரமசிவன் தூங்கி எழுந்ததும் அருகில் இருந்த டீ கடைக்கு டீ குடிக்க சென்றதாக கூறப்படுகிறது. அவரது இரு மகன்களும் இரவில் ஊரின் அருகே கபடி மேட்ச் நடந்ததால் அதனை பார்த்துவிட்டு தனது வீட்டின் மேலே உள்ள அறையில் தூங்கியதாகவும் உமா மட்டும் கீழே தூங்கி உள்ளார். உமா தனியாக கீழே இருப்பதை அறிந்து மர்ம நபர் கத்தியுடன் வீட்டினுள் புகுந்து உமாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார். பரமசிவன் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது உமா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக பாவூர்சத்திரம் போலீசாருக்கும் தகவல் அளித்த நிலையில் பாவூர்சத்திரம் போலீசார் நேரில் வந்து உயிரிழந்த உமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். ஆலங்குளம் டிஎஸ்பி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் விசாரணையை மேற்கொண்டனர்.
கொலைசெய்யப்பட்டஉமாவின் கணவர் பரமசிவன் அளித்த வாக்குமூலம் வருமாறு:
தான் சலூன்
கடை வைத்து தொழில் செய்து வருவதாகவும், திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆகிறது என்றும், தன்னுடைய மனைவி பெயர் உமா, அவளுக்கு 41 வயது ஆகிறது என்றும், தன் மனைவி பீடி சுற்றும் தொழில் செய்து வந்ததாகவும், தனக்கும் இவ்வழக்கின் எதிரியான மணிக்குமார் என்பவருக்கும் நல்ல நட்பு இருந்ததாகவும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு அம்மம் போட்டிருக்கும்போது, மணிகுமார்தான் தன்னை சிகிச்சைக்கு கூட்டிச் சென்று வந்து வீட்டிற்கு விடுவதும் மற்றும் பிற உதவிகளும் செய்து வந்ததாகவும், இந்த சமயத்தில் தான் தன் மனைவி மற்றும் மணிக்குமாரும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும், ,இப்படி இருக்கும்போது நாளாக நாளாக தனக்கு தெரியாமல், தான் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் ஒன்றாக இருந்து வந்துள்ளதாகவும், அக்கம் பக்கத்தினர் தன்னிடம் தனது மனைவியின் நடத்தை பற்றி
தனது மனைவியையும் அவனையும் கண்டித்து வைக்க சொன்னதாகவும், அதன் பிறகு தனது மனைவி தன்னிடம், தான், தெரியாமல் தவறு செய்துவிட்டதாகவும், இனிமேல் மணிக்குமாருடன் பழகமாட்டேன் என்று கூறியதாகவும், இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக தன்னுடைய மனைவி மணிக்குமாருடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்ததாகவும், ஆனால் மணிக்குமாரோ தன் மனைவி உமாவிடம் , எப்போதும் போல் ஒன்றாக பேசி பழகி இருக்கலாம் என்று கூறி டார்ச்சர் செய்திருக்கிறார் என்றும், அதனை கடந்த ஒரு மாதத்திற்கு முன்புகூட தன் மனைவி தன்னிடம் கூறியதாகவும், தானும் இது தொடர்பாக மணிக்குமாரை கண்டித்ததாகவும், ஆனாலும் உமா அவனிடம் பேசாததால் மணிக்குமார் உமா மீது மிகுந்த கோபத்தில்
அதிகாலை வேளையில் வீடு புகுந்து பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே கடந்த சிலதினங்களுக்குமுன்னர் கள்ளக்காதலனோடு கூட்டுசேர்ந்து மனைவி உள்ளிட்ட 3 பேர் கணவனை காரேற்றி கொலைசெய்த சம்பவம் அடங்குவதற்குள் கள்ளக்காதல் தொடர்பாக அடுத்த கொலைச்சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : பாவூர்சத்திரம் அருகே வீடுபுகுந்துபெண்கழுத்தறுத்து கொலை:கள்ளக்காதலன் வெறிச்செயல்.