ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் மாலை 5 மணிக்கு நடைபெறும்

ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூர் கிராமத்தில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அவரது உடலை பொத்தூரில் அடக்கம் செய்ய உறவினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதையடுத்து, கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பொத்தூர் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ள இடம் அவரது உறவினரான காஞ்சனா தேவி என்பவருக்கு சொந்தமான இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :