மதுரை விமான நிலைய வான் கட்டுப்பாட்டு கோபுரம்; மே மாதம் முதல் செயல்பாடு துவங்கும்

by Editor / 23-02-2025 03:13:26pm
மதுரை விமான நிலைய வான் கட்டுப்பாட்டு கோபுரம்; மே மாதம் முதல் செயல்பாடு துவங்கும்

மதுரை விமான நிலையம் இன்னும் முழுமையான சர்வதேச விமான நிலையமாக செயல்பட தொடங்காவிட்டாலும் இங்கிருந்து சென்னை, பெங்களுரூ, ஹைதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், துபாய், சிங்கப்பூர், கொழும்பு போன்ற வெளிநாட்டு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. சமீபத்தில் தினசரி நள்ளிரவு  நேர விமான சேவையும் தொடங்கப்பட்டதால் தற்போது இரவு 11 மணி வரை மதுரை விமான நிலையம் இயங்குகிறது. இதனால் விமானநிலையத்தை  பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மதுரை விமான நிலைய வான் கட்டுப்பாட்டு கோபுரம் ₹88 கோடியில் நவீன வசதிகளுடன் அமைகிறது; மே மாதம் முதல் செயல்பாடு துவங்கும் விமான நிலைய அதிகாரிகள் தகவல்.

அதி நவீன வான் வழிக் கட்டுப்பாட்டு கோபுரம் (ஏ.டி.சி. டவர்) அமைக்கும் பணிகள் கடந்த 2021ல் தொடங்கப்பட்டது. அதிநவீன வசதிகளுடன் அமையும் இந்த வான் வழிக்கட்டுப்பாட்டு மையத்திற்கு, ₹88 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது அந்த பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.

 இதன் மூலம் விமான நிலையத்தில் விமானங்கள் சரியான நேரத்தில் தரையிறங்குவது, புறப்படுவதை எளிதாகவும், துல்லியமாகவும் கையாளும் வகையில் அமைக்கப்படுகிறது.

 வான் வழிகட்டுபாட்டு கோபுரம் சுமார் 44.9 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. 
இக்கட்டடம் 7 மாடிகளை கொண்டது. இதில் 4 மாடிகள் கட்டடமாகவும், 3 மாடிகள் கோபுரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

 தற்போது கண்காணிப்பு கோபுரத்தின் (ATC) பணிகள் முடிவுற்றதால், இன்னும் ஓரிரு மாதங்களில் இம்மையம் செயல்படத் தொடங்கும் என விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

 

Tags : மதுரை விமான நிலைய வான் கட்டுப்பாட்டு கோபுரம்; மே மாதம் முதல் செயல்பாடு துவங்கும்

Share via