ரயில் விபத்து - முதற்கட்டமாக 50 பேர் சென்னை வருகை

by Staff / 03-06-2023 03:41:15pm
ரயில் விபத்து - முதற்கட்டமாக 50 பேர் சென்னை வருகை

ஒடிசா மாநிலம் பாலசோரில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சிவசங்கர் ஒடிசாவிற்கு சென்றுள்ளனர். 250 தமிழர்கள் ஒடிசாவில் இருந்து தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என ரயில்வே எஸ்பி பொன்ராம் விளக்கம் அளித்து இருந்தார். தற்போது முதற்கட்டமாக 50 பேர் ஒடிசாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

 

Tags :

Share via