பெண் காவலர் ஆணவக்கொலை

by Editor / 02-12-2024 11:15:26pm
பெண் காவலர் ஆணவக்கொலை

தெலங்கானா: ஹயத்நகர் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வரும் நாகமணி, கடந்த 15 நாட்களுக்கு முன்பு, வேறு ஜாதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இந்நிலையில், இன்று டிச.02 காலை ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த நாகமணியை அவரது அண்ணன் பரமேஷ் காரால் மோதியுள்ளார். அதன்பின், நிலைதடுமாறி கீழே விழுந்த நாகமணி இறக்கும் வரை கத்தியால் குத்திகழுத்தை அறுத்துக் கொன்றுள்ளார். இதையடுத்து, தப்பியோடிய பரமேஷை போலீஸார் தேடி வருகின்றனர்.ரங்காரெட்டி மாவட்டம், ஹைதராபாத்தில் இருந்து கிட்டத்தட்ட 40 கிமீ தொலைவில் உள்ள இப்ராஹிம்பட்டினத்தில் உள்ள ராயபோலு கிராமத்தின் புறநகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

 

Tags : பெண் காவலர் ஆணவக்கொலை

Share via